இ.தொ.காவினால் பல கோயில்களுக்கு உபகரணங்கள் கையளிக்கப்பட்டு வருகின்றன அந்தவரிசையில் புரட்டப்பகுதிகளுக்கு உட்பட்ட தோட்ட கோயில்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட இத்தோட்டங்களுக்கு தேர்தல் வாக்குறுதியின் விடயங்களின் ஒன்றான கோவில்களுக்கு பொருட்களை கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் ராஜீவ் காந்தி வழங்கி வைத்தார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமூதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலுக்கு அமைய மத்திய மாகாண முன்னால் அமைச்சர் ராமேஸ்வரரின் பணிந்துறைக்கமைய இப்பொருட்கள் கையளிக்கப்பட்டது.
புரட்டொப்,ரஸ்புரூக்,பூச்சிக்கொடை ஆகிய பகுதிகளுக்கே பொருட்கள் கையளிக்கப்பட்டது.
புரட்டொப் ரஸ்புரூக் பகுதி கோவிலுக்கு 1 லட்சம் பெருமதியான கூரைத்தகடுகள் மற்றும் 50,000பெறுமதியான விநாயகர் சிலை வழங்கப்பட்டதோடு பூச்சிக்கொடை பகுதிக்கு ஒலிப்பெருக்கி வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் ராஜீவ்காந்தி,இ.தொ.கா உபதலைவர் செல்லமுத்து மற்றும் தோட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்