புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் இறக்குமதி – 04 கடைகள் சுற்றிவளைப்பு

0
87

பொருத்தமற்ற புற்றுநோயை உண்டாக்கும் இறக்குமதி செய்யப்பட்ட கிரீம்கள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.பாணந்துறை வலனா ஊழல் எதிர்ப்பு செயலணியால் நேற்று சோதனையிடப்பட்டபோது, அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த 04 கடைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கிரீம்களுடன் நான்கு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு விற்பனை செய்யப்படும் க்ரீம் வகைகள் தரமற்றவை எனவும், அவற்றை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிகளை கூட பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

இந்தச் சோதனையின் மூலம் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தடைசெய்யப்பட்ட கிரீம்கள் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here