ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா வனராஜா கீழ் பிரிவு தோட்டத்தில் கடந்த வருடம் பரீட்சை எழுதிய மாணவர்களுள் மூன்று மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலாக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இம்மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று நேற்று (26) ம் திகதி வனராஜா தமிழ் வித்தியாலயத்தில் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிபர் ரெங்கசாமி தமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்கள் மற்றும் 75 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டன.
கடந்த வருடம் நடைபெற்ற புலமைபரிசில் பரீட்சையில் விஸ்வநாதன் சுரேஸ்குமார் 148 மேலியன் தில்ருக்ஷன்147,ராகுலன் நுதானி 143 ஆகிய மாணவர்கள் அதி கூடிய புள்ளிகளை பெற்று சித்திபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு முன்னாள் அதிபர் சந்திரகாந்த மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்