2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீடு மற்றும் முடிவுகளை வெளியிடுவதை நிறுத்தி வைத்து நவம்பர் 18ஆம் திகதி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் விடைத்தாள் மதிப்பீடு கடந்த புதன்கிழமை (08.01.2025) 64 மையங்களில் தொடங்கியது என பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு சிங்கள மொழியிலிருந்து 244,092 மாணவர்களும் தமிழ் மொழியிலிருந்து 79,787 மாணவர்களும் உட்பட மொத்தம் 323,879 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.