2023 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2888 நிலையங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் டெங்கு நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மாகாண மற்றும் மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாண மற்றும் பிராந்திய கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக அதிபர்களை தொடர்பு கொண்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.