எதிர்வரும் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் அந்தப்பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்த துயர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தலாவ நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடி கருத்தரங்கு தலாவ நகரில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பங்குபற்றுவதற்காக மாணவி தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
இதன்போது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் எரிபொருள் பௌசருடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவி படுகாயமடைந்த நிலையில் அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.சம்பவத்தில் படுகாயமடைந்த தாய்(47) அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யட்டியாந்தோட்டையை வசிப்பிடமாக கொண்ட எரிபொருள் பௌசரின் சாரதி (வயது34) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.