5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
நாடு பூராகவும் 3050 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 355,326 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. இதனால் நேர காலத்துடன் பிள்ளைகளை பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் பெற்றோரை கேட்டுக்கொண்டுள்ளது.
மாணவர்களுக்கான ஆலோசனை
பகுதி I வினாத்தாள் 9.30 மணிக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கு விடையளிப்பதற்காக 10.15 மணி வரை 45 நிமிடங்கள் காலம் வழங்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து பகுதி ii வினாத்தாள் 10.45 மணிக்கு வழங்கப்படவுள்ளதுடன் அதற்கு விடையளிப்பதற்காக 12 மணி வரை காலம் வழங்கப்படவுள்ளது.
காலை 9 மணிக்கு மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்குள் வருகை தந்து தமது சுட்டெண்ணுக்குறிய ஆசனத்தில் அமர வேண்டும். பரீட்சார்த்திகள் தமது சுட்டெண்ணை தமது சட்டையின் இடது பக்கத்தில் அணிந்திருக்க வேண்டும். விடையளிக்கும் போது பென்சில் , நீல நிறம் மற்றும் கறுப்பு நிற பேனையை பயன்படுத்தலாம்.
பெற்றோருக்கான ஆலோசனை
நேர காலத்துடன் பிள்ளைகளை பரீட்சை மண்டபத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் , பெற்றோருக்கு பரீட்சை மண்ட பகுதிக்குள் நுழைய முடியாது, இடைவேளையின் போதும் பரீட்சை மண்டபத்திற்குள் செல்வதற்கு பெற்றோருக்கு இடமளிக்கப்படாது , பிள்ளைகளிடம் உணவு மற்றும் தண்ணீர் போத்தலை கொடுத்து அனுப்புங்கள். -(3)