இந்திய அரசாங்கத்தின் 950 லட்சம் ரூபா நிதி ஒதிக்கீட்டின் கீழ் புஸ்ஸல்லாவ சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 10.8.2018 மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களின் தலைமையில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அதிமேதகு ரன்ஜித் சிங் சந்து , இராஜாங்க கல்வி அமைச்சர் வே. ராதாகிருஸ்ணன், இந்திய கண்டி உதவித் தூதுவர் பிரேந்திர சிங் ஆகியோரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந் நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மாகாண சபை உறுப்பினர் துரை மதியுகராஜ மற்றும் மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி சத்தியேந்திரா, அவர்களுடன் கல்விப் பணிமனையின் உத்தியோகத்தர்கள், பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.
பி.கேதீஸ், க. கிஷாந்தன் , எஸ். சதீஸ்