பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹெரோ மேல் பிரிவில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்து சிதறியுள்ளது. செவ்வாய்கிழமை(07/12/2020) காலை 8 மணியளவிலேயே இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த சமயம் திடிரென அடுப்பு வெடித்து சிதறியதோடு எறிவாயு சிலிண்டரில் நுரையும் கசிந்துள்ளதால் குறித்த வீட்டிலுள்ளவர்கள் பயந்துள்ளனர்.உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பாக சிலிண்டர் மற்றும் வெடித்த அடுப்பை அப்புறப்படுத்தியுள்ளதோடு மேற்படி விசாரணைகளை பூண்டுலோயா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
நீலமேகம் பிரசாந்த்



