100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பூண்டுலோயா பஸ் தரிப்பிடத்திற்கான அடிக்கல் 28/07/2021 புதன்கிழமை நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க ,நகர திட்டமிடல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடகே, பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் நிமல் பியதிஸ்ஸ ,கொத்மலை பிரதேச சபை தவிசாளர் சுசந்த நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் , நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் மற்றும் , அரச உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


நீலமேகம் பிரசாந்த், டி. சந்ரு