2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பூனாகல, கபரகல பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்காக பூனாகலவில் கட்டப்படும் புதிய வீட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஹல்தும்முல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பூனாகல, கபரகல பகுதியில் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 51 குடும்பங்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாடுகளின் கீழ் இந்த வீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.