பூமியின் அழிவு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

0
168

இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்கள் அழிந்துவிடும் என பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.கணினி தரவுகளைப் பயன்படுத்தி பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மேற்கொண்ட கணக்கீடுகளின்படி, குறித்த நேரத்தில் அனைத்து பாலூட்டிகளையும் அழிக்கும் ஒரு வெகுஜன அழிவை பூமி எதிர்கொள்ளும் என்று தெரியவந்துள்ளது.

அக்காலகட்டத்தில், பூமியில் உள்ள எந்த உயிரினமும் 40 முதல் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பூமியின் அனைத்துக் கண்டங்களும் ஒன்றாகச் சேர்ந்து வெப்பமான, வறண்ட மற்றும் பெரும்பாலும் வாழத் தகுதியற்ற “Pangaea Ultima” என்று அழைக்கப்படும் சூப்பர் கண்டத்தை உருவாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிமிடத்தில் இருந்து படிம எரிபொருட்களை எரிப்பதை நிறுத்தினாலும் இந்த நிலை உருவாகும் என தெரியவந்துள்ளது.66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பாரிய விண்வெளிப் பாறை மோதியதில் டைனோசர்கள் அழிந்த பிறகு இதுவே முதல் அழிவாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here