113 வது சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது ஆனால் இது இலங்கையை பொறுத்த வரையில் கொண்டாடக்கூடிய நாள் அல்ல காரணம் இன்று இலங்கையில் வாழும் பெண்கள் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார் அவர்கள் இன்று பல்வேறு அடக்கு முறைகளுக்கு உட்பட்டு வருகிறார்கள் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளது பெண்கள் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள் ஆகவே அவர்களின் பிரச்சினைகள் தீர வேண்டும் என்றால் அடி மட்டத்திலிருந்து பெண் தலைமைத்துவங்கள் உருவாக வேண்டும் என ப்ரொட்டெக் சங்கத்தின் தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்தார்.
சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (08) திகதி ஹட்டன் நகரில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு முன்னால் உள்ள ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலையகத்தில் இன்று பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள் அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாததன் காரணமாகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாகவும் குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்பட்டு அவர்கள்; பல்வேறு அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது நாளுக்கு நாள் பெண்கள் துஸ்பிரயோகங்களுக்கும் வன்முறைகளுக்கு ஆளாகி வருகிறார்கள் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள் சிறுவர்கள் பாடசாலை முதல் பல இடங்களில் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் ஆனால் இவற்றிக்கு எந்த வித தீர்வு கிடையாது காரணம் இந்த பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் அளவுக்கு அரசியல் துறையிலும் சரி பொருளாதார துறையிலும் சரியான தலைமைத்துவங்களோ மக்கள் பிரதிநிதிகளோ கிடையாது ஆகவே எமது பிரச்சினைகளை தீரத்து கொள்வதற்கு எம்மை பற்றி நன்கு தெரிந்த எம்மற்றியில் உள்ளவர்களை உருவாக்கினால் தான் தீர்வு கிடைக்கும் இல்லா விட்டால் எந்நாளும் பேசும் பொருளாகவே இருக்கும் ஆகவே எதிர்காலத்தில் பரம்பரைக்கும் இறக்குமதி செய்யப்படும் தலைவர்களுக்கும் வாக்களித்து எமது தலைவர்களாக மாற்றும் கலாசாரம் மாற வேண்டும் அப்போது தான் பெண்களின் உரிமைகள்,அவர்களின் நிலைமைகள் பேசப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்த மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில் இன்று நாளுக்கு நாள் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருகிறது இதனை தடுப்பதற்கு சட்டங்கள் இருந்தாலும் போதுமானதாக இல்லை கடந்த வருடம் மாத்திரம் 63 மூன்று சிறுவர் துஸ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன பெருந்தோட்ட பகுதிகளை எடுத்துக்கொண்டால் பெண்கள் பெரும் பாடுபடுகிறார்கள் தங்களது குடும்பங்களை கொண்டு செல்ல முடியாது உருகி தவிக்கிறார்கள்,அவர்களுக்கு எவ்வித சுதந்திரமும் கிடையாது 200 ஆண்டுகள் இந்த நாட்டுக்காக உழைத்து வந்தாலும் கூட அவர்கள் வேலை செய்யும் இடங்களில் ஒரு கழிவறை கூட கிடையாது மாதவிடாய் நாட்களில் உடை மாற்றிக்கொள்வதற்கு என்று ஒரு இடம் கூட கிடையாது இவ்வாறான நிலையில் தான் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது இது உண்மையில் இலங்கையில் கொண்டாடப்பட வேண்டிய விடயமல்ல என தெரிவித்தார்.
ப்ரொட்டெக் சங்கம் 113 வது சர்தேச மகளிர் தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஹட்டனில் நடைபெற்றது அதில் ஆர்ப்பாட்ட காரர்கள் ‘வரியை நாம் மட்டுமா செலுத்த வேண்டும்,முறைசார வேலைகளில் ஈடுபடும் பெண்கள் தரத்தை உறுதி செய்,வாழ்வதற்கேற்ற ஊதியத்தை வழங்கு,போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை காட்சிப்படுத்திய வண்ணம் அமைதிப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர் இந்த போராட்டத்தில் அந்த சங்கத்தைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்




