கண்டிப் பெரஹராவைப் பார்வையிட வருவோர் என்ற போர்வையில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டி நகருக்கு வரலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கண்டி நகருக்குள் நுழையும் பொதுமக்களை சோதனையிட்டபோது, சந்தேகத்திற்கிடமாக எட்டு தேசிய அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அதியட்சகர் தெரிவித்துள்ளார்.
சமூக விரோத செயல்கள், மோசடிகள் மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் சந்தேக நபர்கள் நகருக்குள் நுழைந்திருக்கலாம் எனவும் பொலிஸார் எச்சரிக்கின்றனர். இதுபோன்ற சந்தேக நபர்களைக் கண்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸாருக்கு அறிவிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அனுருத்த பண்டார கேட்டுக்கொண்டுள்ளார்.