லிந்துலை பெரிய இராணிவத்தை தோட்டத்தில் அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் நேரில் சென்று சந்தித்ததோடு அவர்களுக்கான நிவாரண பொருட்களையும் வழங்கி வைத்தார்.
பெரிய இராணிவத்தை தோட்டக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தினால் 16 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன . அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 76 பேர் தற்போது தற்காலிக இருப்பிடமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான உதயகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச்செயலாளரும் மத்திய சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவர் சிவானந்தன், சங்கத்தின் பிரதி தேசிய அமைப்பாளர் கல்யாண குமார் , பிரதேச அமைப்பாளர்களான நாகேந்திரன் கார்த்திக் ,சுதா,பிரசாத் ஆகியோர் பெரிய இராணிவத்தை தோட்டத்துக்கு விஜயம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.