பெருந்தோட்டப் பகுதிகளில் முச்சக்கரவண்டிகளில் அதிகளவான கட்டணம் அறவிடப்படுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்!!

0
290

பெருந்தோட்டப் பகுதிகளில், போக்குவரத்தில் ஈடுபடும் அதிகமான ஓட்டோக்களில், கட்டண மீற்றர் பொருத்தப்படுவதில்லை என்றும் இதனால், ஓட்டோக்களை வாடகைக்கு அமர்த்திச் செல்வோரிடமிருந்து, அதிகளவான கட்டணம் அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஓட்டோக்களில் மீற்றர் பொருத்துவது அவசியமென, அரசாங்கம் வலியுறுத்தியுள்ள போதிலும், பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள ஓட்டோ சாரதிகள், அது குறித்துக் கவனத்திற் கொள்வதில்லையென, பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here