கண்டியில் உள்ள அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபைக்கு சொந்தமாக காணிகளில் பெரிய அளவில் தேயிலை உற்பத்தி கிடைப்பதில்லை.
அங்கு பால்பண்ணை வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டால் அங்கு வாழும் மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
பொருளாதார அபிவிருத்தி நடக்கும்,இதனை விளங்கிக்கொள்ளாது பால்பண்ணை உற்பத்தி வேலைத்திட்டத்தை நிறுத்த முயட்சிப்பது முட்டாள் தனமானது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான சபையில் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை,தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), ஊழியர் சகாய நிதிய (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மற்றும் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார், அவர் மேலும் கூறுகையில்,
தோட்டத்தொழிலாளர்கள் கஷ்டப்படுகின்றனர், ஆனால் எமது கண்களுக்கு அவை தெரிவதில்லை, தேயிலை தோட்டங்களை தனியார் துறைக்கு கொடுப்பதாகவும், அகத்து குறித்து நாம் மௌனம் காப்பதாகவும் என எம்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் தோட்டங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன, வெளியாட்களை வேலைக்கு அமர்த்துதல், நூற்றி என்பது நாட்கள் கடந்தும் எவரையும் பதிவு செய்யாத பிரச்சினை உள்ளது, இதையும் தாண்டி பல்வேறு தவறுகள் நிறுவனங்கள் மூலமாக இடம்பெற்று வருகின்றது.
இவற்றையெல்லாம் நாம் தட்டிக்கேட்டுக்கொண்டுளோம், அதேபோல் தற்போது கூட்டு ஒப்பந்தம் இல்லாது போயுள்ளது, கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலங்களில் அது மோசமானதாகவும், அடிமை சாசனத்திற்கு கொண்டு செல்வதாக கூறிய நபர்கள்,இன்று அமைதியாக உள்ளனர்.
கூட்டு ஒப்பந்தம் இல்லாத காலத்தில் தான் அதன் முக்கியத்துவம் என்ன என்பது பலருக்கு புரிகின்றது. கூட்டு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் உணர்ந்தும் நாம் எவ்வளவோ வலியுறுத்தினோம். இதுவே மக்களை பாதுகாக்கின்றது என்பதை தொடர்ச்சியாக கூறினோம்.
எனினும் தவறான கருத்துக்களை முன்வைத்து கூட்டு ஒப்பந்தத்தை நீக்க வலியுறுத்தினர். எனினும் இன்று அதன் முக்கியத்துவம் சகலருக்கும் தெரிய வந்துள்ளது.
கூட்டு ஒப்பந்தம் இல்லாத காலத்திலும் நிறிய மக்களுக்கு நாம் உதவிகளை செய்துள்ளோம். உணர்வு பூர்வமாக நாம் செயற்பட்டு வருகின்றோம்.கூட்டு ஒப்பந்தத்தை சாட்டாக வைத்து பேசியவர்கள் இன்று கூட்டு ஒப்பந்தம் இல்லாத காலத்தில் நேரடியாக பேச முடியும்.
இதில் நாம் செய்த தவறு என்னவென்றால் சகல தொழிற்சங்க உறுப்பினர்களையும் சமமாக பார்த்தோம், இதன்போது எமது உறுப்பினர்களுக்கு நாம் முக்கியத்துவம் வழங்காது போய்விட்டோம்.
ஆனால் இனியும் அந்த தவறு இடம்பெறாது, இந்த நிலவரம் மாறும்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் அங்கத்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவத்தை வழங்கும்.மாற்று தொழிற்சங்க அங்கத்தவர்கள் அவர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்பாட்டால் அவரவர்களின் காரியாலயங்களில் சென்று தீர்த்துக்கொள்ள வேண்டும்.
மக்களின் நலன்களுக்காக உண்மையாக பணியாற்றுவது யார் என்ற உண்மை மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.அதேபோல் தோட்டத்தொழிலாளர் பிரச்சினை குறித்து தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவிடம் கலந்துரையாடியுள்ளோம்.
அடுத்த ஒரு இரு மாதங்களில் இந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என அவர் எம்மிடத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல் அரச பெருந்தோட்ட காணிகள் குறித்த பிரச்சினையில், இலங்கையில் புதிதாக பால் உற்பத்தி திட்டமொன்று உருவாக்கப்படுவதாகவும், அதனை முன்னெடுக்க குறித்த காணிகளை தனியார் துறையிடம் ஒப்படைப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
இந்த விடயத்தில் நாம் மௌனம் காப்பதாகவும், இதற்கு உடந்தையாக நாம் செயற்படுகின்றோம் எனவும் எதிர் தரப்பில் சிலர் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த விடயத்தில் எமது நிலைப்பாடு என்ன என்பதை நாம் வெளிப்படையாக சகல தரப்பிடமும் தெரிவித்துள்ளோம் . இந்த விடயத்தில் குறித்த தரப்பினர்களுக்கு என்ன நன்மைகள் செய்துகொடுக்க வேண்டுமோ அவை நடக்கும் என கூறியுள்ளனர். இங்கு வசிக்கும் 1424 குடும்பங்களும் பாதுகாக்கப்படுவதாக கூறியுள்ளனர்.
அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபைக்கு சொந்தமாக காணிகளில் பெரிய அளவில் தேயிலை உற்பத்தி கிடைப்பதில்லை. மிக குறைவான எண்ணிக்கையான குடும்பத்தினரே தேயிலை பறிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு மாற்று வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டால் அங்கு வாழும் மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
பொருளாதார அபிவிருத்தி நடக்கும்,இதனை விளங்கிக்கொள்ளாது நாம் பால்பண்ணை உற்பத்தி வேலைத்திட்டத்தை நிறுத்த முயட்சிக்கின்றோம். மலையக மக்களின் பிரதிநிதிகளாக நாம் எப்போதும் இருப்போம், குறித்த பகுதியில் இருக்கும் 1424 குடும்பங்களையும் நாம் பாதுகாப்போம்.இவர்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டியது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொறுப்பாகும். இது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன, நிச்சயமாக இந்த விவகாரத்தில் தீர்வொன்றை எடுப்போம்.
கடந்த அரசாங்கம் செய்த அநியாயங்கள் குறித்து எம்மிடம் ஆதாரங்கள் உள்ளன, போகில், கலஹா, கிரேட்வெலி, ஹந்தான, போப்பிட்டிய, நாகஸ்தன்ன, வியமுள்ள, மாதொலகந்த, குடதொலகந்த, கனேகந்த ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 550 ஏக்கர் காணிகள் தனியார் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இங்கு வசிக்கும் சகல குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து ஏன் எவரும் வாய் திறக்கவில்லை. நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் முன்னைய ஆட்சியில் கொடுக்க விருந்த காணிகளை வழங்காது நிறுத்தினோம். இலங்கையில் நாற்பது சதவீத பால்மா உற்பத்தியே இடம்பெறுகின்றது, ஏனையவை இறக்குமதியில் தங்கியுள்ளது. ஆகவே சுய உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் இந்திய வீட்டுத்திட்டத்தை திறந்து வைத்த வேளையில் அதிலும் விமர்சனங்கள் முன்வைத்தனர், இன்னொருவர் பெற்ற பிள்ளைக்கு நாம் பெயர் வைத்தோம் என்கிறனர், பிள்ளையை பெற்றால் மட்டும் போதாது அதனையும் தாண்டி பிள்ளைக்கு செய்யவேண்டிய கடமைகள் பல உள்ளன.
2016-2019 காலப்பகுதியில் இந்திய வீட்டுத்திட்டதின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக வெறுமனே 178 மில்லியன் ரூபாகவே வழங்கப்பட்டுள்ளது,எனிமும் இந்த அரசாங்கத்தின் ஒரு வருட காலத்தில் 636 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளோம்.எனவே இந்த உட்கட்டமைப்பு வசதிகளை முழுமைப்படுத்தி மக்களிடம் கையளிப்போம். இதற்காக இந்திய அரசாங்கத்திற்கு நாம் நன்றிகளை தெரிவிக்கின்றோம் அதேபோல் அமைச்சின் வீட்டுத்திட்டத்தை பொருத்தவறரை இருந்த 7 பேர்ச் காணிகளை 10 பேர்ச் காணியாக மாற்றியுள்ளோம்.அதற்கமைய இன்று ஒரு வீட்டின் பெறுமதி 13 இலட்சம் ரூபாவாகும். இந்த வீடுகளை தற்காலிக குடியிருப்பில் உள்ளவர்களுக்கே வழங்குகின்றோம் என்றார்.