மஸ்கெலிய பிளாண்டேசனுக்குரிய பெருந்தோட்டங்களில் பெருந்தோட்ட சேவையாளர்களை சிதைக்கும் வகையில் ஒரு தொழிற்சங்கம் அடாவடித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அத்தோட்ட சேவையாளர்களை இடமாற்றம் செய்யும்படி தோட்ட நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடாத்தி இருப்பது கண்டணத்துக்குரிய செயற்பாடாகும்.
இதனை எந்த வகையிலும் நியாயப்படுத்தவோ அல்லது அங்கீகரிக்கவோ முடியாது. இது தோட்ட சேவையாளர்களுக்கு நடைமுறையில் இருக்கும் கூட்டு ஒப்பந்தத்திற்கு முரணாகும் என அதன் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான
கா.மாரிமுத்து மஸ்கெலிய பிளான்டேசனுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.
இது குறித்து சட்டத்தரணி மாரிமுத்து மேலும் தெரிவித்துள்ளதாவது:-
குறிப்பாக ஸ்ரஸ்பி கிளனுகி மொக்கா பிரன்ஸ்பிக் கிளன்ரில் மரே பிரன்லோ மௌசாகெல்ல ஹபுகஸ்தென்ன லக்சபான ஆகிய தோட்டங்களில் உள்ள பெருந்தோட்ட சேவையாளர்களை மாற்றுக் கட்சியை சேர்ந்த தொழிற்சங்கமொன்று ஐந்து
தொடக்கம் பத்து ஆண்டுகள் வரை ஒரே தோட்டத்தில் கடமை புரிந்தவர்களாய் இருப்பின் அவர்களை
இடமாற்றுவதற்கான சூழ்ச்சி மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை நாம் கண்டிக்கின்றோம்.
தோட்ட சேவையாளர்களை ஒரு தொழிற்சங்கம் ஆதிக்கத்தின்படியும் வேண்டுகோளுக்கிணங்கவும்
இடமாற்றம் செய்ய மஸ்கெலிய பிளான்டேசனுக்கு எந்தவித உரிமையும் இல்லை. தோட்ட சேவையாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின்படி நிர்வாக மாற்றங்கள் ((Administration Transfer) மட்டுமே செய்ய முடியும்.
எனவே மஸ்கெலிய பிளாண்டேசன் ஒரு அரச பலம் கொண்டுள்ள தொழிற்சங்க வேண்டுகோளுக்கிணங்க தோட்ட சேவையாளர்களை இடமாற்றம் செய்ய முயன்றால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டுமென எச்சரிக்கை செய்தார்.
எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்