”உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே தினத்தை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” – என ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
“உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் உன்னத நாளே மே தினம். உழைப்பின் மேன்மையை உணர்த்தும் இந்நன்னாளில் தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் உட்பட தொழிலாளர் பெருமக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும்.
ஆட்சியாளர்களின் தவறான பொருளாதார கொள்கைகளால் இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பும்
எம்பட்டாளிகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் எம்நாடு இயல்புநிலைக்கு திரும்பி தொழிலாளர் பெருமக்கள் அனைவரும் நிம்மதியாக பெருமூச்சு விடும் சூழல் உதயமாக வேண்டும். அதேபோன்று பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடம் அரசியல்பேதங்களுக்கு அப்பால் மலையக தலைமைகள் ஒன்றுபட வேண்டும்”-என்றும் அவர் தமது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.