பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் குறைபாடுகளை நீக்க மக்கள் முன் வரவேண்டும்.

0
160

பெருந்தோட்ட பகுதிகளில் கல்வி சுகாதார பொருளாதாரம் உள்ளிட்ட பல விடயங்கள் இது வரை முழுமையாக தீர்க்கப்படாதன் காரணமாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறான பொது பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றினை தீர்த்து வைக்கும் நோக்கில் கண்டி செட்டிக் மற்றும் கரிட்டாஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

குறிப்பாக சமூத்தில் உள்ள பல்வேறு துறைசார்ந்தவர்களை இணைத்து பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் பயனாக பல பிரதேசங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு மேற்கொண்ட செயத்திட்டங்களை மேலாய்வு செய்வதும் எதிர்க்காலத்திரல் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (09) ஹட்டன் செட்டிக்மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது மலையகம் 200 மன்னார் முதல் மாத்தளை வரை 15 நாட்கள் தொடர்ச்சியாக நடபயணமாக வந்த நபர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டன.

எல.;எல்.பி.பி செயத்திட்ட முகாமையாளர் ஜயசிறி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துலையாடலுக்கு தேசிய இணைப்பாளர் வைஸ்ணவி, நிரோஜனி,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,அதிபர்கள் ,ஆசிரியர்,தொழற்பயிற்சி நிறுவனத்தின் பிரதிநிகள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here