பெற்றோரின் அதீத மூட நம்பிக்கை – பேயோட்டியால் 3 வயது பெண் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம்!

0
159

காலி பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்ட சிறுமி ஒருவருக்கு நோயை குணப்படுத்துவதாகத் தெரிவித்து பேயோட்டி ஒருவர் சித்திரவதை புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த பேயோட்டியை கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காலி, பெந்தோட்டை, வடுமுல்ல பிரதேசத்தில் மூன்று வயது சிறுமியொருவர் நோய் வாய்ப்பட்டமையினால் அருகில் உள்ள விகாரைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.

நோயிலிருந்து குணமாக்குவதாக கூறி மூன்றரை வயது சிறுமியை ஊசியால் குத்தி சித்திரவதை செய்ததாக கூறப்படும் பேயோட்டி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது சிறுமியின் உடலில் உள்ள நோயை குணப்படுத்துவதற்கு சிறுமியின் தந்தைக்கு அறிமுகமான பேயோட்டி ஒருவர் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதனையடுத்து பேயோட்டும் நபர் சிறுமியை பார்வையிட்டு விட்டு, சிறுமியின் உடலுக்குள் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நோய் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆகவே கடவுளின் கட்டளைப்படி அதனை குணப்படுத்த முடியும் என்று கூறி, சிறுமியின் உடலில் இருந்து இரத்தம் வரும் வரை ஊசியால் குத்தி சித்திரவதை செய்துள்ளார் எனவும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here