பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலும் எச்சரிக்கையும்

0
200

வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கமான 0, 1 மற்றும் 2 ஆகிய இலக்கங்களுக்கான எரிபொருள் இன்று சனிக்கிழமை வழங்கப்படுகின்றது.

இதற்கிடையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் QR குறியீட்டுக்கு எரிபொருளை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை QR குறியீட்டு முறைக்கு பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்யுமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

உரிய நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here