இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் நேற்று நல்லிரவு முதல் பெற்றோல் ,டிசல் மண்ணெண்ணை ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன இதனால் பொது மக்கள் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து மக்கள் பல்வேறு சுமைகளுக்கு உள்ளாகினர்.
பொருட்களின் விலையேற்றம் காரணமாக இன்றும் மக்கள் ஒரு நேர உணவினையும் போசக்கற்ற விலை குறைந்த உணவுகளையும் உண்டு வருகின்றனர்.
ஒரு சில குடும்பங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்ககளுடை வாழ்க்கையினை கொண்டு செல்ல முடியாத நிலையில் நேற்று நள்ளிரவு (31.08.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 361 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 417 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் 341 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.மேலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 359 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிபொருட்களின் விலையுயர் காரணமாக அனைத்து பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கவுள்ளது. இதனால் மக்கள் மேலும் மேலும் துன்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.அத்தோடு கடந்த காலங்களில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டபோது உயர்த்தப்பட்ட அத்தியவசிய பொருட்களினதும் ஏனைய பொருட்களினதும் விலைகள் குறைக்கப்பட வில்லை இன்னும் மக்கள் அதே விலையிலேயே அதிகமான பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளில் பெற்றோல் மற்றும் டீசல் போன்றவற்றி விலையுயர்வுடன் அத்தியவசி பொருட்களின் விலைகள் மேலும் அதிகரி;க்கக்கூடும் இதனால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பாதிக்கக்கூடும் இதனால் கல்வி, சுகாதாரம்,பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் இது பாரிய அளவில் தாக்கம் செலுத்தும் எனவும் எனவே எரிபொருட்களின் விலைகளை உயர்த்தும் போது சாதாரண மக்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு உயர்த்த வேண்டும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெற்றோலின் விலையேற்றம் காரணமாக தங்களது தொழிலினை செய்ய முடியாது இப்போது மிகவும் கஸட்டத்திற்கு மத்தியில் மீண்டும் வரும் நிலையில் மீண்டும் விலையுயர்த்தப்பட்டுள்ளதனால் ஆட்டோ சாரதிகள் தொழில் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அதிகரிக்கப்படும் போது 10 மடங்கில் அதிகரிப்பதாகவும் குறைக்கும் போது ஒரு சிறிய தொகையில் குறைப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்து கின்றனர்.
எது எவ்வாறான போதிலும் தற்போது மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலையுயர் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் எனவே அரசாங்கம் மக்களின் நிலையினை கருதி விலை அதிகரிப்பினை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று பலரும் தெரிவித்தனர்.
மலைவாஞ்ஞன்