பெல்லன்வில ரஜமகா விகாரையில் வருடாந்த பெர​ஹெரா ஆரம்பம் ; மட்டுப்படுத்தப்படும் போக்குவரத்து

0
148

பெல்லன்வில ரஜமகா விகாரையில் வருடாந்த பெர​ஹெரா ஆரம்பமாகவுள்ளது. பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு அருகில் உள்ள வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் இன்று முதல் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பெல்லன்வில ரஜமகா விகாரையில் வருடாந்த பெர​ஹெரா ஆரம்பமாகவுள்ளது.

இதனால் இன்று முதல் எதிர்வரும் 20ம் திகதி வரை இரவு 7.00 மணிக்கு பெல்லன்வில விகாரையில் பெர​ஹெரா ஆரம்பித்து வீதி உலா செல்லவுள்ளது.

ஊர்வலத்தின் போது விகாரைக்கு அருகில் உள்ள வீதிகள் மூடப்படவுள்ளதால் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுகொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here