உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கட்டாயம் வர வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் வலியுறுத்தியுள்ளதாக வெளெிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்;
கீவில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் நான் பேசினேன். புட்டின் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்.
நம்பகமான மற்றும் உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மூலம் உக்ரைனுக்கு நீதியான மற்றும் நீடித்த அமைதியை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
ஐரோப்பா அதன் முழு பங்கை வழங்கும். உதாரணமாக, எங்கள் ஷேப் (SAFE) என்ற பாதுகாப்புக் கருவி, உக்ரைன் ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதில் முக்கியமானதாக இருக்கும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.