ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிட்டரத்மலை, தொட்டுலாகலை மற்றும் தபேதென்ன ஆகிய தோட்டங்களில் வசிக்கும் 18 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பலாங்கொட பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிப்புரியும் ஊழியர்கள் 18 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.
குறித்த ஊழியர்கள் ஒரே பேருந்தில் ஹப்புத்தளையில் இருந்து பலங்கொட பகுதிக்கு சென்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேருந்தில் பயணித்த 33 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.