பேருந்தில் வைத்து யுவதி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறை பரிசோதகரை சிறுமியின் தந்தை உள்ளிட்ட குழுவினர் தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக யட்டியந்தோட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.
கித்துல்கல காவல்துறை பிரிவில் கடமையாற்றும் காவல்துறை பரிசோதகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளையிலிருந்து கித்துல்கல காவல் நிலையத்தின் இரவுச் சேவைக்குச் செல்லும் பேருந்தில் அருகில் அமர்ந்திருந்த யுவதியை தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை பரிசோதகர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
யுவதி இது தொடர்பில் தனது தந்தைக்கு தொலைபேசியில் தெரிவித்ததையடுத்து தந்தை ஒரு குழுவுடன் வந்துள்ளார். நண்பர்கள் பேருந்தை நிறுத்தி காவல் பரிசோதகரை தாக்கியது தெரியவந்துள்ளது




