பேருந்துகள் இல்லை எனும் போது போக்குவரத்துக்கு வீதிகள் புனரமைத்து என்ன பயன் ?

0
163

தலவாக்கலையில் இருந்து நாவலப்பிட்டி செல்லும் பிரதான போக்குவரத்து பாதையின் ஊடாக வரும் பேருந்துகள் குறைந்த அளவே காணப்படுகிண்டது இதனால் பேருந்துகள் நேரம் தாமதித்தே வருகிண்டது

அவ்வாறு நேரம் தாமதமாக வரும் பேருந்துகள் அதிகமான பயணிகளை எற்றி வருவதுடன் பயணிகள் மிதி பலகையில் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் இதனால் பெரும் அச்சத்திலேயே தாங்கள் பயணம் செலுத்துவதாகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர் .

மேலும் இவ்வழியாக பாடசாலை செல்லும் மாணவர்கள் பயண சீட்டினை பயன்படுத்துவதால் அரச பேருந்துகளில் இவர்களை ஏற்ற மறுப்பதுடன் இவர்கள் அடுத்து வரும் பேருந்திற்கு வெகு நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர் .

பேருந்துகள் இல்லை எனும் போது போக்குவரத்துக்கு வீதிகள் புணரமைத்து பயனும் இல்லை எனவே உரிய அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .

 

தகவல் ந.சுசிதரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here