மாதாந்தம் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணம் குறைக்கப்படமாட்டாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.குறித்த விலை திருத்தத்திற்கு அமைய ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 27 ரூபாவினால் குறைக்கப்பட்டது.
இருப்பினும், பேருந்து கட்டணம் குறைக்கப்படமாட்டாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.இருப்பினும், கடந்தமுறை எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.