பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

0
157

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் பெறுமதிசேர் வரி அதிகரிப்புடன் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முதல் ஒரு சாதாரண பேருந்தின் கொள்வனவு சுமார் ஒரு கோடியே ஐம்பத்தேழு இலட்சம் என்று குறிப்பிட்ட அவர், அந்த விலைக்கு பேருந்தை வாங்கி சாதாரண மக்களை ஏற்றிச் செல்ல முடியாத நிலை உள்ளது.

இது தவிர, இந்த பெறுமதிசேர் வரி திருத்தத்தின் மூலம் பேருந்து உதிரிபாகங்களின் விலை, எண்ணெய் விலை, எரிபொருள் விலை, சேவைக் கட்டணம் போன்ற அனைத்தும் உயரும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அதிபர் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here