ரஜினியை வரவேற்ற பணிமனை ஊழியர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இந்திய திரையுலகில் ஜாம்பவானாக இருப்பவர் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று பெங்களூர் ஜெயநகரில் உள்ள மாநகர அரசு போக்குவரத்து கழகத்தில் ஆரம்பகாலத்தில் தான் பணியாற்றிய பணிமனைக்கு சென்று பார்வையிட்டார்.அப்போது தன்னுடன் ஓட்டுநராக பணியாற்றிய தனது நண்பர் ராஜ் பகதூரை அழைத்து சென்று அங்குள்ள ஊழியர்களுடன் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
முன்னர் ரஜினியை வரவேற்ற பணிமனை ஊழியர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
பெங்களூருவில் உள்ள போக்குவரத்து கழகத்தின் பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.