பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல் தொடர்பால், யுவதி ஒருவர் தனது தலை முடியை இழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், வடமராட்சி பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரும் பேஸ்புக் ஊடாக நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அண்மைக்காலமாக இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
கருத்து முரண்பாடு அதிகரித்ததால் குறித்த இளைஞன், யுவதியின் வீட்டுக்குச் சென்று காதலியின் நீளமான தலைமுடியை வெட்டியுள்ளார்.குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட யுவதி, காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த இளைஞன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் வலிகாமம் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.