சட்டவிரோத மாணிக்க்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது ஏனைய ஜந்து பேர் தப்பி ஓட்டம் .
பொலிஸார் வலைவீச்சி.
கால்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கேசல்கமுவ ஒயாவில் சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறுபேரில் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாகவும் மிகுதி 05 பேரை பொலிஸார் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் 18.03.2018. ஞாயிற்றுகிழமை பிற்பகல் 02.30 மணி அளவில் இவர் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொகவந்தலாவ பொலிஸாரால் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் இதில் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
எனவே சட்டவிரோத மாணிக்க்கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் பொகவந்தலாவ பொலிஸார் கைபற்றியுள்ளதாக தெரிவிக்கபடுவதோடு கைது செய்யபட்ட சந்தேக நபரும் தப்பி ஒடிய சந்தேக நபர்களும் பொகவந்தலாவ டின்சின் பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது
குறித்த பிரதேசத்தில் பலமுறை இது போல் சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் இவர்கள் ஈடுபடுவதாக தெரிவிக்கபடுகிறது.
கைது செய்யபட்ட சந்தேக நபரை நாளைய தினம் அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபடஉள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதிஸ்)