பொகவந்தலாவை தோட்டக் கமிட்டி தலைவர்கள் கூட்டத்தில் திகாம்பரம் எம்பி பங்கேற்பு
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பனவற்றின் தோட்டக்கமிட்டி தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று 6 ஆம் திகதி பொகவந்தலாவை ஸ்ரீ புர கிறின்லைன் விருந்தக கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த விசேட கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.