பொகவந்தலாவ கிலானிதோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேர் பொகவந்தலாவ பொலிஸாரால் 17.06.2018.ஞாயிற்றுகிழமை கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின்போதே இந்து கைது இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. கைது செய்யபட்டவர்களிடம் இருந்து மாணிக்கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்ட இரண்டு சந்தேகநபர்களும் கிலானிதோட்டபகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் 18.06.2018.திங்கள் கிழமை அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
இதேவேலை பொகவந்தலாவ கெம்பியன் தோட்டபகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர்களிடம் இருந்து பொதிசெய்யபட்டு வைக்கபட்டிருந்து மாணிக்ககல் இல்லவகைகளை கொண்ட 09 பைகளையும் பொலிஸார் மீட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் தப்பிசென்றுள்ளதாகவூம் தப்பிசென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறி;ப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)