பல தேர்தல் காலங்களில் பொகவந்தலாவ கிளார்னி தோட்ட பாதையை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி வழங்கப்பட்டும் அது வாய்வார்த்தையாகவே காணப்பட்டது. ஆனால் இன்று அப்பாதைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நோர்வூட் பிரதேச சபை தலைவர் ரவி குழந்தைவேலுவினால் மேற்கொள்ளப்பட்டது.
மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமூதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டில் 200,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் கனபதி கனகராஜினால் ஒதுக்கப்பட்ட 500,000 நிதியையும் கொண்டு இன்று அப்பாதை புனரமைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நோர்வூட் பிரதேச சபை தலைவர் ரவி குழந்தைவேல் உட்பட பிரதேச சபை உறுப்பினர் அசோக்குமார் மற்றும் தோட்ட பொதுமக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்