பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் முன்னெடுக்கபட்ட மாணிக்ககல் சுரங்க குழிகள் உடனடியாக மூடப்படவேண்டும்!!

0
154

அம்பகமுவ அபிவிருத்தி கூழு கூட்டத்தில் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் வழியுருத்தல்

தேசிய இரத்தினகல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையின் அனுமதி வழங்கபட்டு பொகவந்தலாவ ஜெப்பல்டன் தோட்டபகுதியில் கடந்த மூன்று வருடகாலமாக முன்னெடுக்கபட்டுவந்த மாணிக்ககல் சுரங்க குழிகளை உடனடியாக மண்யிட்டு மூடப்படவேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதிகனகராஜ்.வழியுருத்தினார்.

18.06.2018.திங்கள் கிழமை அம்பகமுவ பிரதேச செயலாளர் காரியாளயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அம்பகமுவ அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது காணி சீர் திருத்த உத்தியோகத்தர்களுக்கு இதனை வழியுருத்தினார். இதன் போது மேலும் அவர் தெரிவிக்கையில் குறித்த பகுதியில் மூன்று வருட ஒப்பந்த அடிப்படையில் குறித்த பகுதியில் தோண்டபட்ட மாணிக்ககல் சுரங்க குழிகளை ஒப்பந்தம் நிறைவடைந்த உடன் சுரங்க குழிகளை மூடிதருவதாக கூறியிருந்தார்கள்.

ஆனால் ஒப்பந்தம் நிறைவடைந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரையிலும் அந்த சுரங்ககுழிகள் மூடப்படவில்லை அப்பகுதியில் காணப்படுகின்ற சுரங்குளிகளில் நீர் நிரம்பி காணப்படுவதால் அந்த நீர் மண் கலந்து கேசல்கமுவ ஓயாவுடன் கலந்து காசல்ரீ நீர்தேக்கத்திற்கு சென்று மண் நிரம்புவதாக தெரிவித்தார்.

இதேவேலை குறித்த பகுதியில் தோண்டபட்டுள்ள மாணிக்ககல் சுரங்க குழிகளில் நீர் நிரம்பி காணபடுவதால் அந்த நீர் மாசுபட்டு டெங்கு போன்ற நோய்கள் ஏற்படகூடிய வாய்ப்புகள் காணபடுவதாகவும் பொகவந்தலாவ ஜெப்பல்டன் தோட்டபகுதியில் கால்நடைவளர்ப்பவர்கள் தமது கால்நடைகளுக்கு புல் அறுக்க பெரிதும் சிரமபடுவதாகவும் குறித்தபகுதியில் கால்நடைகளுக்கு புல்அறுக்க செல்பவர்கள் சிலவேலைகளில் தவறி விழுந்தால் உயிர்இழக்ககூடிய நிலமைகள் காணகூடிய பிரதேசமாக காட்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனவே இவ்விடயம் தொடர்பாக இந்த பாரிய மாணிக்ககல் சுரங்க குழிகளை உடனடியாக மண்யிட்டு மூடுவதற்கு காணி சீர்திருத்த உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கேட்டுகொண்டார்.

 

(பொகவந்தலாவநிருபர்.எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here