பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் மீண்டும் மாணிக்ககல் அகழ்விற்கு அனுமதி வழங்கபட மாட்டாது அம்பகமுவ அபிவருத்தி கூழு கூட்டத்தில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவிப்பு.
பொகவந்தலாவ ஜெப்பல்டன் தோட்டபகுதியில் மீண்டும் மாணிக்க்கல் அகழ்வதற்கு அனுமதி வழங்கமுடியாது எனவும் குறித்த பகுதியில் கடந்த மூன்று வருடங்கலாக அகழபட்டு வந்த மாணிக்ககல் சுரங்ககுழிகலை மூடும் நடவடிக்கையினை மேற்கொள்ள இருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
13.08.2018.திங்கள் கிழமை இடம் பெற்ற அம்பகமு பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டத்தின் போது மத்திய மாகாணசபை உறுப்பினர்களான கணபதிகனகராஜ் மற்றும் சோ.ஸ்ரீதரன் ஆகியோரால் பொகவந்தலாவ ஜேப்பல்டன் தோட்டபகுதியில் மூன்று வருடகாலமாக தேசிய இரத்தினகல் மற்றும் தங்க ஆபாரணங்கள் அதிகாரசபையின் அனுமதியோடு முன்னெடுக்கபட்டு வந்த மாணிக்ககல் அகழ்வினை மேற்கொண்ட மாணிக்ககல் சுரங்க குழிகல் சுமார் எட்டு மாதகாலமாக மூடப்படாமல் காணப்படுவதாகவும் மீண்டும் குறித்த பகுதியில் மாணிக்ககல் அகழ்வு மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதாக அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டத்தின் போது கேள்வி எழுப்பட்டபோது மீண்டும் குறித்த பகுதியில் மாணிக்ககல் அகழ்வு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கபடமாட்டாது எனவும் இவ்விடயம் தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லையென அதிகாரசபையின் அதிகாரி தெரிவித்தார்
இதன் போது பொகவந்தலாவ ஜெப்பல்டன் தோட்டபகுதியில் அகழபட்ட மாணிக்கல் சுரங்க குழிகலை உடனடியாக மூடுமாறு மலையக மக்கள் முண்ணனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்ணன் மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ் மற்றும் சோ.ஸ்ரீதரன் ஆகியோர் கோறிக்கைகளை முன்வைத்தபோதே வெகுவிரைவில் குறித்த பகுதியில் உள்ள மாணிக்ககல் சுரங்க குழிகலை மூடுவதாக தெரிவித்தார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)



