பொகவந்தலாவ லெச்சுமி கீழ் பிரிவு தோட்டமக்கள் அருந்தும் குடி நிரீல் நாயின் உடலம்!!

0
154

பொகவந்தலாவ லெச்சுமி கீழ் பிரிவு தோட்டமக்கள் அருந்தும் குடி நிரீல் நாயின் உடலம் .சம்பந்தவர்கள் தீர்வினை பெற்றுகொடுக்காததால்  ஆறுமுகன் தொண்டமானின் கவனத்திற்கு….

நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி கீழ் தோட்டமக்கள் நாளாந்தம் தமது குடி நீருக்காக பயன்படுத்தும் ஊற்று நீர் தாங்கியில் இறந்த நாயின் உடலம் ஒன்று இனந்தெரியதாவர்களால் கொண்டுவந்து போடபட்டுள்ளதாக லெச்சுமி கீழ் பிரிவு தோட்டமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த சம்பவம் 03.03.2018.சனிகிழமை மக்களுக்கு தெரியவந்ததை அடுத்தே உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

20180303_131143 20180303_131200

இவ்விடயம் தொடர்பாக நோர்வூட் பொலிஸார் மற்றும் பொகவந்தலாவ பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுசுகாதார பரீசோதகர் மற்றும் தோட்ட நிர்வாகம் ஆகியோருக்கு அறிவிக்கபட்ட போது சம்பவ இடத்திற்கு நோர்வூட் பொலிஸார் மாத்திரம் வருகை தந்ததாகவும் மற்றும் தோட்டநிர்வாகம் மற்றும் சுகாதார பரீசோதகர் ஆகியோர் வருகை தரவில்லையெனவும் இம் மக்கள் குற்றம் சுமத்தினர்.

பொகவந்தலாவ லெச்சுமி மத்திய பிரிவு தோட்டபகுதியில் முன்னெடுக்கின்ற வீடமைப்பு திட்டத்தினால் இம் மக்கள் நாளாந்தம் அருந்தும் குடி நிரீல் மண் கலக்கபடுவதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இம் மக்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டதை தொடர்ந்தே இந்த மக்கள் பருகும் குடிநிரீல் இறந்த நாயின் உடலத்தை கொண்டுவந்து போட்டுள்ளதாகவும் இதனை அறியாத மக்கள் இந் நீரினை அருந்தி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ லெச்சுமி கீழ் பிரிவு தோட்டமக்களின் கோரிக்கைக்கு அமைய நோர்வூட் பிரதேச்சபையின் கீழ் லெச்சுமி கீழ் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாடசாமி சரோஜா சம்பவ இடத்திற்கு வருகைதந்து இம் மக்களுக்கு தீர்வினை பெற்று தரும் நோக்கில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் அதன் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக உறுதி அளித்தார்.

 

(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here