பொகவந்தலாவ லோய்னொன் தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி 14 தொழிலாளர்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்இந்த சம்பவம் 29.09.2018 சனிகிழமை காலை 09.30மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. இன்று காலை பொகவந்தலாவ லோய்லோன் தோட்டபகுதியில் உள்ள தேயிலை மலையில் அடிவாரத்தில் உள்ள குளவி கூடு கலைந்து வந்து தாக்கியதாக தெரிவிக்கபடுகிறது
இதேவேலை குளவிகொட்டுக்கு இலக்காகிய 14 தொழிலாளர்களுள் இரண்டு ஆண் தொழிலாளர்களும் 12 பெண் தொழிலாளர்களுமே குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதாகவும் இதில் 10 பெண் தொழிலாளர்களும் இரண்டு ஆண் தொழிலாளர்களும் சிக்சிசை பெற்று வீடு திரும்பியதோடு மேலும் இரண்டு பெண் தொழிலாளர்கள் தொடர்ந்தும் சிகிக்கை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஏ.எஸ்.கே.ஜெயசூரிய தெரிவித்தார்.
இதேவேலை குளவி கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்களை குறித்த தோட்ட வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டி ஒன்று இல்லாமையினால் லொறி வண்டியில் ஏற்றி வந்ததாகவும் குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள் தெரிவித்தனர்
இதேவேலை குறித்த தோட்ட வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி ஒன்றினை பெற்றுதருவதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்பட வேண்டுமெனவூம் தெரிவித்தார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)