பொகவந்தலா நகரில் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை!!

0
132

நோர்வூட் பிரதேச சபைக்குற்பட்ட பொகவந்தலா நகரில் வடிகாண் புணரமைப்புக்கா அகழப்பட்ட பாரிய குழிகளை விரைவில் மூடுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நோர்வூட் பிரதேச சபையினூடாக பொகவந்தலா நகரில் வடிகாலமைப்பு புணரமைப்பு திட்டம் கடந்ந சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

அண்மைய காலமாக மழை காலநிலை நிலவி வருகின்றமையினால் வெட்டப்பட்டுள்ள வடிகாண்களில் வெள்ள நீர் நிறைந்து கணப்படுகின்றது.

நகரிற்கு வருகைத்தருவோர் மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதியும் உடனடியாக புணரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here