பொகவந்தலா பகுதியில் தண்டப் பணத்தால் உருவான சனசமூக நிலையம்

0
190

பொகவந்தலா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான பொகவந்தலா கொட்டகலை மத்திய பிரிவில் 1950 ஆண்டு தண்டப்பணத்தினால் உருவான ஆடன் மண்டபம் இன்று மக்களுக்கு பல்வேறு நன்மையளிப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மண்டபம் அக்கால பகுதியில் தோட்டத்தினை நிர்வகித்து வந்த ஆங்கிலேயர் ஒருவரான ஆடம் என்பவர் தொழிலாளர்கள் தோட்டத்தில் வேலை செய்யும் போது பிழை விடுவதாகவும் அவ்வாறு பிழை விடும் ஒவ்வொருவருக்கும் 50 சதம் ஒரு ரூபா இரண்டு ரூபா என அறிவிட்டதாகவும் குறித்த பணத்தினை கொண்டு தோட்ட மக்களின் நலன் கருதி இந்த மண்டபத்தினை உருவாக்கியதாகவும் இப்போது குறித்த மண்டபத்தில் பொது கூட்டங்களும் திருமணங்கள் பூப்புனித நீராட்டு விழாக்கள்,அறிநெறி சமூர்த்தி உள்ளிட்ட அரச மற்றும் பொது கூட்டங்கள் ஒன்றுகூடல்கள் இலவசமாக நடைபெற்று வருவதாகவும் இப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

குறித்த மண்டபம் பல தடைவைகள் அரசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிர்வாகம் ஆகியன புனரமைத்துள்ளதாகவும் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு இது பாரிய அளவில் நன்மைகள் புரிந்துள்ளதாகவும் இதை உருவாக்கியத்தற்கு துணை புரிந்தவர்களுக்கும் இதனை உருவாக்கியவருக்கும் நன்றி தெரிவிப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் எமது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கமை சட்டவிரோதமாக செயப்படும் போது வாகனங்கள், தளபாடங்கள், மரங்கள், பலகைகள்,உணவு பொருட்கள் என பல விதமான பொருட்கள் பொலிஸாரினால் கையகப்படுத்தப்பட்டு நீதி மன்றங்களில் சமர்ப்பிக்கின்றனர்.குறித்த பொருட்கள் முறையான பராமறிபின்றி நீதி மன்றங்களில் வீணாகின்றன.

இந்த பொருட்களுக்கு முறையான சட்டங்களை கொண்டு வந்த அவற்றினை உடனுக்குடன் பயனுள்ள விடயங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் நாட்க்கும் நாட்டு மக்களின் அபிவிருத்திற்கு பயன்படுத்தலாம் என பலர் சுட்டிக்காட்டுவதும் இங்கு கோடிட்டு காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here