பொகவான தோட்ட தொழிலாளர் தொடர் குடியிருப்பு பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம்.

0
176

பொகவந்தலா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலா பொகவான தோட்டத்தில் உள்ள தொழிலாளர் தொடர் குடியிருப்பு பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் காணப்படுவதாக பிரதேச வாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் தற்போது மழையுடனான காலநிலையுடனான காலநிலையினை தொடர்ந்து பல்வேறு பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவி பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.

நுவரெலியா மாவட்டத்திலும் பல பகுதிகளில் டெங்கு நோய் பரவி பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் பொகவந்தலா பொகவான தொழிலாளர் குடியிருப்பில் கழிவுநீர் வழிந்தோடுவதற்கு அமைக்கப்பட்டுள்ள கால் வாய்கள் முறையாக பராமறிக்கப்படாததன் காரணமாக பல இடங்களில் நீர் தேங்கியுள்ளன.

இதனால் நுளம்பு குடம்பிகள் அதிகரித்து இரவு வேளையில் கடிப்பதாகவும் இதனால் தூக்கம் களைவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் டெங்கு நோய் பரவினால் இப்பகுதியில் வாழும் சுமார் பலநூறு குடும்பங்களைச் சேர்ந்து சிறுவர்கள் பெரிவர்கள் சிறியவர்கள் உட்பட பலர் பாதிக்கப்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் தோட்ட நிர்வாகம் தொழிலாளர் குடியிருப்புக்களை பராமறித்து வந்ததகவும் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாகவும்.சுகாதார பிரிவினரோ அல்லது தோட்டத்தில் நலன்புரி உத்தியோகஸ்த்தர்களோ இது குறித்து பாராமுகமாக இருந்து விடுவதாக இவர்கள் மேலும் தெரிவி;க்கின்றனர்.

எது எவ்வாறான போதிலும் டெங்கு நுளம்பு பரவுவதனால் பிரதேசத்தில் மற்று மன்றி பலரும் பாதிக்கப்படுவதனாலும் இது சுகாதார துறையினர் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here