பொங்கல் பண்டிகை : பலமடங்கு அதிகரித்த விமான கட்டணம் : பயணிகள் அதிர்ச்சி

0
97

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து மதுரை உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் தங்கி வசிப்போர், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். கடைசி நேரத்தில் தொடருந்து, பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள் விமானங்களில் செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் விமான கட்டணங்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.3,624 வசூலிக்கப்படும் நிலையில், ரூ.13,639 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மதுரைக்கான கட்டணம் ரூ.3,367 ரூபாயிலிருந்து ரூ.17,262 ஆக அதிகரித்துள்ளது. திருச்சிக்கு வழக்கமாக ரூ.2,264 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.11,369 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கோவைக்கான கட்டணம் ரூ.3,315-இல் இருந்து ரூ.14,689 ஆகவும் சேலத்துக்கு ரூ.2,290 இல் இருந்து ரூ.11,329 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு விமான கட்டணங்கள் சடுதியாக அதிகரிக்கப்பட்டமை பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here