சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் பொது சுகாதார பரிசோதகர்கள் தானம் வழங்கப்படும் இடங்களை ஆய்வு செய்வார்கள்
எதிர்வரும் பொசன் பூரணை தினத்திற்கு தானம் ஏற்பாடு செய்பவர்கள் அனைவரும் அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.
அதன் பின்னர் சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் பொது சுகாதார பரிசோதகர்கள் தானம் வழங்கப்படும் இடங்களை ஆய்வு செய்வார்கள் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
அந்த ஆய்வின் பின்னர், தேவையான ஆலோசனைகளையும் ஆதரவையும் தாம் வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொசன் பூரணையை முன்னிட்டு புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான உணவு வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
அந்தவகையில், எதிர்வரும் பொசன் பூரணை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து ஆலயங்களிலும் விசேட பரிசோதனைகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக உபுல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.