‘தொட்டலங்க பொட்டி அக்கா’ எனப்படும் விந்தனி பிரியதர்ஷிகாவுக்கு சொந்தமான கிரேண்ட்பாஸ் பர்குயூஷன் பகுதியிலுள்ள 03 கட்டடங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டடங்கள் போதைப்பொருள் கடத்தலின் மூலம் பணம் ஈட்டியதாகக் கூறி, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் மாஅதிபர் நடத்திய விசாரணையை தொடர்ந்து குறித்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.