பண்டிகை காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட ஆசன சீட்டுக்கான கட்டணத்தை விட அதிக கட்டணத்தினை அறவிடும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எச் ஹேமசந்திர விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணங்களை அறவிடும் போது ஆசன சீட்டினை தன்வசம் வைத்துக்கொண்டு 1955 என்ற இலகத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.