பொது செயலாளர் பதவியிலிருந்து விலகினார் ஆறுமுகன் தொண்டமான்

0
199

இலங்கை தொழிலளார் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடல் கொழும்பில் உள்ள இ.தொ.கா தலைமையகத்தில் 30.08.2018 அன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.காங்கிரஸின் பொது செயலாளரும், தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கூடிய தேசிய சபை மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களால் இந்த நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

IMG_0083

அந்தவகையில் இதுவரை காலமும் காங்கிரஸின் பொது செயலாளர் மற்றும் தலைவராக பதவி வகித்த ஆறுமுகன் தொண்டமான், 30.08.2018 அன்றிலிருந்து தலைவராக மட்டும் செயற்படவுள்ளார்.

அத்தோடு, பொது செயலாளராக அனுஷியா சிவராஜாவும், பிரதி பொது செயலாளராக ஜீவன் தொண்டமான் மற்றும் உப தலைவராக பதுளை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here