பொத்துவில் பிரதேசத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் !

0
70

பொத்துவில் பிரதேசத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறும் பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி ஏ.யூ.அப்துல் ஸமட் அறிவித்துள்ளார்.

பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட சில பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதால் மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுள்ளார்.

குறிப்பாக விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் உப உணவுப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு இந் நோய் அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விவசாயிகள் தத்தமது பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்பு கொண்டு நோய் தடுப்பு தொடர்பான மாத்திரைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

எலிக்காய்ச்சலினால் அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதோடு, விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொதித்தாறிய நீரை பருகுமாறு கேட்டுள்ளார்.

காய்ச்சல், தசைகளில் கடமையான வலி, கண் விழி சிவப்பு நிறம் அடைதல், சிறுநீர் வெளியேற்றம் குறைவடைதல், சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல் இந்நோயின் அறிகுறிகளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here