எரிபொருள் விலை, அத்தியவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலவாக்கலை நகரில் இன்று மாலை 7.30 மணியளவில் போராட்டம் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள்சக்தி, தலவாக்கலை முன்னாள் நகர சபை தலைவர் அசோக செயபால தலைமையில் நடைபெற்ற இப்போராட்டம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் நிவாரணம் வழங்கவேண்டிய அரசாங்கம், மாறாக எரிபொருள் விலை, பொருட்களின் விலைகளை அதிகரித்து வருகின்றது, இதனை எம்மால் ஏற்கமுடியாது. ஆகவே, பொருட்கள், சேவைகளின் விலைகள் உடன் குறைக்கப்பட வேண்டும்,மக்களுக்கு நியாங்கள் கிடைக்கும்வரைஇதுபோல போராட்டங்கள் வெடிக்கும் என கோஷமெழுப்பினர்.
தலவாக்கலை நகரில் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டு நகரின் ஊடாக தலவாக்கலை பஸ் தரிப்பிடம் வரை சென்று அங்கு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பா.பாலேந்திரன், க.கிஷாந்தன்



